முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.சி.க. தொடர்ந்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2025      தமிழகம்
Jayakumar 2023 04 15

Source: provided

சென்னை : தலித் வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு தமிழக முதல்வரின் பதில் என்ன? சிவகங்கையில் 'நீயெல்லாம் புல்லட் ஓட்டலாமா?' என சாதி வெறியர்களால் அய்யாச்சாமி என்ற வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட கடுந்துயரத்தை கடந்து சென்றுள்ளார் சங்பரிவார் மு.க.ஸ்டாலின்!

திரைத்துறையில் இருந்தாலும் சமூக செயற்பாட்டாளராய் டைரக்டர் பா.ரஞ்சித் குரல் கொடுத்துள்ளார். ஆனால் தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து. தலித்களின் வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியில் அமர்ந்து விட்டு அவர்களுக்கு எதிராகவே காவல்துறையை வைத்து பொய் முடிச்சுகளை போடும் இந்த அவல ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து