முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவின் பெலகாவியில்  ஆட்டோ டிரைவர் தாக்கி  கோவா முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ சூர்யாஜி மம்லேதார் (68) உயிரிழந்ததார்.

இது குறித்து கர்நாடக போலீஸார் கூறுகையில், மம்லேதார் பெலகாவியின் காடே பஜாரில் உள்ள ஸ்ரீனிவாசா லாட்ஜில் ஓர் அறையை முன்பதிவு செய்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் அவரின் கார் நுழைந்தபோது, அது ஒரு ஆட்டோவில் இடித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோ டிரைவருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்பு இது சிறிய மோதலாக மாறியது. அப்போது அந்த ஆட்டோ டிரைவர் மம்தாரை அறைந்துள்ளார். அதன்பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. தான் பதிவு செய்த அறைக்குச் செல்ல படிகளில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறப்புக்கான காரணத்தை அறிய அவரது உடல், உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, மம்தாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் முஜாஹித் சனதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.வை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆட்டோ டிரைவரை போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பெலகாவி டி.சி.பி. ஜெகதீஸ் ரோகன் கூறுகையில், "இந்தச் சம்பவம் மம்லேதாரின் கார் ஆட்டோ ஒன்றின் மீது மோதியதைத் தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் உண்டான வாக்குவாதத்தின்போது ஆட்டோ டிரைவர் மம்லேதாரை கன்னத்தில் அடித்துள்ளார். பின்பு தனது அறைக்கு மம்லேதார் சென்றபோது நிலைகுலைந்து விழுந்துள்ளார். அங்குள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் 2 மணிக்கு இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்" என்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லாவூ சூர்யாஜி மம்லேதார் கடந்த 2012-2017-ல் கோவாவின் போண்டா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து