முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய ராணுவம் அமைக்க முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2025      உலகம்
Jelensky 2024 08 19

Source: provided

முனிச் : ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும் என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார்.  ரஷிய ராணுவ கட்டமைப்புக்கு ஈடாக ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 14-ந்தேதி பாதுகாப்பு மாநாடு தொடங்கியது. இதில், ஆசிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு நேற்று வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான சவால்கள் பற்றி பேசப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உண்மையில், ஐரோப்பா தன்னுடைய சொந்த ஆயுத படையை உருவாக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்றே நான் நம்புகிறேன் என்றார். நாம் நேர்மையாக இருப்போம். ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய விசயங்களில் கவனம் செலுத்த முடியாது என அமெரிக்கா கூறினாலும் கூறலாம் என சந்தேகம் கிளப்பிய அவர், இதனை நாம் இல்லையென மறுத்து விட முடியாது என்றும் கூறியுள்ளார்.

அதனால், ஐரோப்பா ஒன்றிணைய வேண்டிய தேவை உள்ளது என வலியுறுத்திய ஜெலன்ஸ்கி, தனித்ததொரு வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கையை ஐரோப்பா கொண்டிருக்க வேண்டும். எங்களுடைய சொந்த பாதுகாப்பில் நாங்கள் தீவிரத்துடன் இருக்கிறோம் என அமெரிக்காவுக்கு எடுத்து காட்டும் வகையில் அது அமையும் என்றும் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, போரில் தோல்வியை தழுவியபோதும், ரஷிய அதிபர் புதின், அவருடைய ஆயுத படையில் 1.5 லட்சம் வீரர்களை சேர்த்து கொண்டிருக்கிறார். இது பல ஐரோப்பிய ராணுவங்களை விட அளவில் மிக பெரியது ஆகும். ஒவ்வொரு வாரமும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணியிலும் புதின் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், ரஷிய ராணுவ கட்டமைப்புக்கு ஈடாக ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து