முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பலி 18 ஆக உயர்வு: உயர் மட்ட விசாரணைக்கு ரெயில்வே துறை உத்தரவு : உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2025      இந்தியா
Waiting-list 2023-11-17

Source: provided

புதுடெல்லி : டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பலி 18 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து உயர் மட்ட விசாரணைக்கு ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியையும் ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

உலகில் அதிகமானோர் கூடும் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான கும்பமேளா விழா ஜனவரி 13  ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. மகா கும்பமேளா நிகழ்வில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துறவிகள், சாதுக்கள், ஆன்மிக தலைவர்கள் மற்றும் பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பிரயாக்ராஜ் வந்து செல்கிறார்கள்.

இதற்காக பிரயாக்ராஜ் மாவட்டத்திலும், கும்பமேளா நடைபெறும் பகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, செயற்கை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்படுகிறது. கும்பமேளாவில் நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர கூட்ட நெரிசல் காணப்பட்டது. உத்திர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தற்போது கூடுதலாக 4 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி ரெயில் நிலையத்தில் தற்போது கூட்டம் குறைந்து இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனனர்.

டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது. நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.  பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் மீட்பு பணிகளுக்காக தீ அணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். விடுமுறை தினம் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான நிலையில் தற்போது டெல்லி ரெயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று ரெயில்வே அமைச்சர் கூறியுள்ளார். மேலும் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த துயர சம்பவம் குறித்து தனது வேதனையை தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் கூறுகையில், " டெல்லி ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பற்றியே எனது எண்ணம் உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரெயில்வே நிர்வாகம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவிவை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து