முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி வீட்டில் பணம் மீட்பு: துணை ஜனாதிபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      இந்தியா
Jagadeep 2024-12-10

Source: provided

புதுடெல்லி : டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க  நேற்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.  

மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவையில் கூறுகையில், “நீதிபதி வர்மா விவகாரம் தொடர்பாக  அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் நான் அவை முன்னவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் விவாதித்தேன். சந்தேகமில்லாமல் இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. நாங்கள் மூன்று பேரும் இந்த விவகாரத்தை கவனித்து வருகிறோம். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்னெடுப்புகளை பொதுவெளியில் வெளியிடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

என்றாலும் மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் எனது முன்னிலையில் அவையில் உள்ள தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவை முன்னவரும் அதனை ஏற்றுக்கொண்டார். அவையில் உள்ள கட்சித் தலைவர்களின் வசதிக்காக  கூட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளேன். நாம் ஒரு சிறப்பான உரையாடலை நடத்துவோம் மற்றும் ஒரு வழியை முன்னெடுப்போம் என்று நம்புகிறேன். ஏனெனில், நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்படும் போது சிறப்பாக செயல்பட முடியும்.

எந்த ஒரு விஷயம் குறித்தும் நான் ஒரு தீர்மானத்துக்கு வரவிரும்பவில்லை, ஆனாலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனக்கு கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் பொதுவெளியில் பகிர்ந்துள்ளது நாட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு கணக்கில் வராமல் கட்டுக்கட்டாக பணக்குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பின்பு அது குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து