எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி என்பது முரண்பாடுகளி்ன் மொத்த உருவம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு திரைமறைவு நெருக்கடிகளுக்கு பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிரபேரங்களுக்குப் பிறகும், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியைஅமைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்துபத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணியை அறிவித்திருக்கிறார். பலமுறை தள்ளி வைக்கப்பட்டபத்திரிகையாளர் சந்திப்பு மாலை 3 மணிக்குத் தான் நடைபெற்றது. அதற்கு முன்பு பத்திரிகையாளர்சந்திப்பு மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்ட பேனர் மூன்று முறை மாற்றப்பட்டது. முதலில் தேசியஜனநாயக கூட்டணி என்றும், பிறகு தமிழக பா.ஜ.க. கூட்டம் என்றும், இறுதியாக தேசிய ஜனநாயககூட்டணி என்றும் மாற்றப்பட்டு மிகுந்த குழப்பத்திற்கிடையே அமித்ஷா நடுநாயகமாக அமர்த்தப்பட்டுஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமி, இன்னொரு பக்கம் அண்ணாமலை அமர்ந்திருக்க கூட்டணியைஅமித்ஷா அறிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணி குறித்து அமித்ஷா அறிவித்தாரேதவிர, வேறு எந்த விவரமும் வெளியிடாமலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு பேசுவதற்கு கூட வாய்ப்புதரப்படாமலும், அப்படி பேசினால் பத்திரிகையாளர்களின் நெருக்கடியான கேள்விகளை எதிர்கொள்ளமுடியாது என்ற நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து அமித்ஷா வேகமாக வெளியேறினார்.பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருப்பதை அனைவரும்அறிவார்கள். கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், அதன் முன்னணி தலைவர்களுக்கு எதிராகவும் தொடுத்த தாக்குதல்கள், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் பல பேட்டிகளின் வாயிலாக தொலைக்காட்சிகள் மூலம் ஆதாரத்துடன்வெளிவந்தது தமிழக அரசியல் களத்தில் இனி தீவிரமாக பேசப்படுகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்து பா.ஜ.க.வில் சேர்ந்த நயினார் நாகேந்திரன் புதியபா.ஜ.க. தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த மூன்றாண்டுகளாக, அண்ணாமலையின்திராவிட இயக்க எதிர்ப்பு, குறிப்பாக, அ.தி.மு.க.வுக்கு எதிராக பேசிய அண்ணாமலை இனிதொடர்ந்து அதே குற்றச்சாட்டுகளை கூறுவாரா ? தமிழகத்தில் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது ? கூட்டணியின் பெயர் தேசிய ஜனநாயககூட்டணியா ? அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியா ? வேறு என்ன பெயர் கொண்டு அழைப்பதுஎன்ற பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்து விட்டன. கடந்த காலங்களில் மகாராஷ்டிராவில் சிவசேனாவோடு பா.ஜ.க. கூட்டணி வைத்தது, பீகாரில், நிதிஷ்குமாரோடு ஒன்றுபட்ட ஐக்கிய ஜனதாதளத்தோடு கூட்டணி வைத்தது, அதனால் அந்த இரண்டு கட்சிகளும் பிளவை சந்தித்து இன்றைக்கு பா.ஜ.க.வால் கபளீகரம் செய்யப்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதைப் போலஅ.தி.மு.க.வையும் அமித்ஷா கபளீகரம் செய்கிற முயற்சிக்கு எடப்பாடி பலியாகி இருக்கிறார்.
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அப்பட்டமான ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. ஒரு கொள்கையற்றகூட்டணி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. பா.ஜ.க.வின் செயல் திட்டங்களில் பலவற்றைஅ.தி.மு.க. ஏற்கப் போகிறதா ? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்பு, மும்மொழி திட்டம் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை மூலமாகஇந்தியை திணிக்கும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை திறப்பது, மக்களவை தொகுதி சீரமைப்பில் தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பு, நிதிப் பகிர்வில் தமிழகம் புறக்கணிப்பு, வெள்ள நிவாரண நிதியில்பழிவாங்கும் போக்கு, மும்மொழித் திட்டத்தை ஏற்காததால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்குரூபாய் 2132 கோடி வழங்காததால் 8 மாதங்களாக ஊதியம் தர முடியாத நெருக்கடி, இதனால் 40லட்சம் மாணவர்கள் பாதிப்பு, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரேகலாச்சாரம், சிறுபான்மையின மக்களின் சொத்துகளை பறிக்கும் வக்பு சட்டத் திருத்தம்,சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை சட்ட திருத்தம், 100 நாள் வேலைதிட்டத்திற்கு நிதி மறுப்பு, 10 ஆண்டுகாலமாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத நிலைஎன தமிழக விரோத பா.ஜ.க. அரசின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம்தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்குஏற்பட்டுள்ளது. அப்படி அவர் விளக்கம் அளிக்கவில்லையெனில், பா.ஜ.க. - அ.தி.மு.க. சந்தர்ப்பவாததமிழக விரோத கூட்டணிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார், .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை கடந்தது
12 Apr 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-04-2025
12 Apr 2025 -
வீடு, வாகனங்கள் கடன் வட்டியை குறைக்க வங்கிகள் நடவடிக்கை
12 Apr 2025மும்பை : ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்ததையடுத்து கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அடுத்தடுத்து குறைக்கத் தொடங்கியுள்ளன.
-
தேசிய கூட்டணியில் தான் உள்ளோம்: டி.டி.வி. தினகரன் தகவல்
12 Apr 2025சென்னை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்.
-
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
12 Apr 2025புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க.-வுக்கே வெற்றி: விஜய்
12 Apr 2025சென்னை, 2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி.
-
அமெரிக்காவின் வரி கொள்கையால் உலக நாடுகள் உற்சாகம்: அதிபர் ட்ரம்ப்
12 Apr 2025வாஷிங்டன், அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள
-
பொன்முடிக்கு இ.பி.எஸ். கடும் கண்டனம்: அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிப்பு
12 Apr 2025சென்னை : பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை, சைதாப்பேட்டை
-
அமெரிக்காவுடன் அவசர கதியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
12 Apr 2025புதுடெல்லி : இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்த
-
தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Apr 2025சென்னை : பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
-
சூடான்: துணை ராணுவம் தாக்குதல் 32 பேர் பலி
12 Apr 2025தர்பூர் : வடக்கு தர்பூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று முன்தினம் ராபிட் சப்போர்ட் போர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்க
-
முரண்பாடுகளின் மொத்த உருவம் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
12 Apr 2025சென்னை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி என்பது முரண்பாடுகளி்ன் மொத்த உருவம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
-
ஜூன் முதல் வாரத்தில் மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
12 Apr 2025சென்னை, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது.
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
12 Apr 2025திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா... ரங்கா... ரங்கா...
-
மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
12 Apr 2025புதுடெல்லி : மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் 49,542 பேருக்கு ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
12 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு : 145 பில்லியன் டாலரை எட்டும்: நிதி ஆயோக்
12 Apr 2025புதுடில்லி : இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலரை எட்டும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
-
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 Apr 2025கொடைக்கானல் : தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
-
கோவையில் ஐ.பி.எல். ஆன்லைன் சூதாட்டம்: 7 பேர் கைது; ரூ.1.09 கோடி ரொக்கம் பறிமுதல்
12 Apr 2025கோவை : கோவையில், ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வோம்: பிரதமர் மோடி
12 Apr 2025புதுடில்லி : தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
-
சுனில் நரைன் புதிய சாதனை
12 Apr 2025சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சுனில் நரைன் தனது சுழல் பந்து வீச்சினால் சி.எஸ்.கே. பேட்டர்களை திணறடித்தார்.
-
வரும் 21-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகை
12 Apr 2025அமெரிக்கா : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வருகிற 24-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்
12 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல்.
-
உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா
12 Apr 2025சீனா : உலகின் மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு
12 Apr 2025தருமபுரி : கர்நாடகா காவிரியில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.