முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகவும் நம்பிக்கையின்றி விளையாடும் சி.எஸ்.கே.: முன்னாள் ஆஸி. கேப்டன்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      விளையாட்டு
Maikal 11-04-2025

Source: provided

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் நம்பிக்கையின்றி விளையாடுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடர்...

 ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில்  ஏப்ரல் 11ல்  நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சி.எஸ்.கேவை வீழ்த்தியது.

 தொடர் தோல்வி...

ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது.

நம்பிக்கை இல்லை... 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நம்பிக்கை குறைவாக இருப்பதாகவும், அவர்கள் விளையாடுவது இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு இல்லை எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருப்பது போன்று தெரிந்தது. புதிய பந்தில் பந்துவீச்சு நன்றாக இருந்தது. சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் உதவியது. சென்னை சூப்பர் கிங்ஸின் திட்டம் தவறாகிவிட்டது என நினைக்கிறேன். அவர்கள் நம்பிக்கையன்றி விளையாடியது போன்று இருந்தது. ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் முனைப்பு காட்டியவாறு தெரியவில்லை.

பழைய அணுகுமுறை...

சென்னை சூப்பர் கிங்ஸ் பழமையான அணுகுமுறையை மேற்கொள்வதாக தெரிகிறது. மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஏற்படும் தோல்விகளை தவிர்ப்பதற்காக விளையாடுவது போன்று தெரிகிறது. அப்படி செய்வதற்கு பதிலாக, அவர்கள் ரிஸ்க் எடுத்து விளையாடி ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கலாம் என்றார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து