முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் திணறும் ஐ.பி.எல். அணிகள்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      விளையாட்டு
CSK-1 11-04-2025

Source: provided

சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் ஐ.பி.எல். அணிகள் திணறி வருகின்றன.

சொந்த மைதானம்...

ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதல் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் சொந்த மைதானங்கள் உள்ளன. சி.எஸ்.கே. அணிக்கு சேப்பாக்கம், ஆர்.சி.பி. க்கு பெங்களூரு சின்னசாமி, கொல்கத்தாவுக்கு ஈடன் கார்டன், மும்பை இந்தியன்ஸ்க்கு வான்கடே சொந்த மைதானம் ஆகும். இதேபோல் மற்ற அணிகளுக்கும் சொந்த மைதானம் உள்ளது.

விரக்தி...

ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் ஏழு போட்டிகள் சொந்த மைதானத்திலும், ஏழு போட்டிகள் வேறு மைதானத்திலும் நடைபெறும். சொந்த மைதானங்கள் அந்தந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் சொந்த மைதானத்தில் அணிகள் வெற்றி பெற திணறி வருகின்றன. இந்த தடுமாற்றத்திற்கு தங்களுக்கு ஏற்றவகையில் ஆடுகளம் தயாரிக்கப்படவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் ரகானே, ஆர்.சி.பி. அணி பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தங்களது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை சென்னை சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் 156 இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதன்பின் ஆர்.சி.பி.க்கு எதிராக 50 ரன்னிலும், டெல்லிக்கு எதிராக 25 ரன்னிலும், நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.

ஆர்.சி.பி....

ஆர்.சி.பி. அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. குஜராத் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

கொல்கத்தா அணி ஈடன் கார்டனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆர்.சி.பி.-க்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவிற்கு எதிராக 4 ரன்னிலும் தோல்வியடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ்...

குஜராத் டைட்டன்ஸ் தனது சொந்த மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தானுக்கு எதிராக 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்...

ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. கவுகாத்தியில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்...

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஆர்.சி.பி.க்கு எதிராக தோல்வியடைந்தது. கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்...

டெல்லி கேப்பிட்டல்ஸ் டெல்லி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்...

சண்டிகார், தரம்சாலா ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிராக 50 ரன்னில் தோல்வியடைந்துள்ளது. சி.எஸ்.கே.-வுக்கு எதிராக 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்...

பஞ்சாப் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து