முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனில் நரைன் புதிய சாதனை

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sunil 11-04-2025

Source: provided

 சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சுனில் நரைன் தனது சுழல் பந்து வீச்சினால் சி.எஸ்.கே. பேட்டர்களை திணறடித்தார். 4 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பௌலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 18 பந்துகளில் 44 ரன்கள் குவித்து மிரட்டினார். அதனால், ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

ஐ.பி.எல். வரலாற்றில் இது சுனில் நரைனுக்கு 16ஆவது ஆட்ட நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக கே.கே.ஆர். அணிக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். ரஸ்ஸலை முந்தி சுனில் நரைன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் ஏபிடி வில்லியர்ஸ் 25 முறை ஆட்டநாயகன் விருது வாங்கி முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக கிறிஸ் கெயில் (22), ரோஹித் சர்மா (19), விராட் கோலி (18), வார்னர் (18), தோனி (17) இருக்கிறார்கள்.

_________________________________________________________________________________________

க்ளென் பிலிப்ஸ் விலகல்

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை க்ளென் பிலிப்ஸை பயன்படுத்தாக குஜராத் அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. இருப்பினும் சிறந்த பேட்டர், பீல்டர், சுழல்பந்துகளை வீசக்கூடிய பிலிப்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பது கவனிக்கத்தக்கது.

சன்ரைசஸ் போட்டியில் 5ஆவது ஓவரில் பீல்டிங்கிற்கு வந்தார் க்ளென் பிலிப்ஸ். பிரசித் கிருஷணா வீசிய ஓவரில் 4ஆவது பந்தில் வேகமாக பீல்டிங் செய்வார். அப்போது இந்தக் காயம் ஏற்பட்டது. கடந்த ஏப்.3ஆம் தேதி ககிசோ ரபாடா தனிப்பட்ட காரணத்தினால் அவரது சொந்த நாட்டிற்கு திரும்பினார். எப்போது திரும்பி வருவார் எனக் கூறவில்லை. இந்த சீசனில் வெறுமனே 7 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே குஜராத் அணி வாங்கியது. அதில் 2 வீரர்கள் இல்லாமல் இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

_________________________________________________________________________________________

சென்னை அணி குறித்து ஹஸ்ஸி

வெள்ளிக்கிழமை அன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சி.எஸ்.கே.-வை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இது குறித்து மைக்கேல் ஹஸ்ஸி  கூறியதாவது:- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மந்தமான பேட்டிங் லைன்-அப் இந்த ஆட்டத்திலும் அப்பட்டமாக வெளிப்பட்டது. “ஆட்டத்தின் முடிவு மற்றும் அணியின் செயல்பாடு எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.  எங்கள் அணியின் ஆட்ட பாணி குறித்து அதிகம் பேசப்படுகிறது. எங்கள் வீரர்களை அவர்களின் இயல்பு தன்மையில் இருந்து மாறுபட்டு ஆடுமாறு நாங்கள் சொல்வதில்லை.

 மேலும், அணியில் சிறந்த வீரர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது.  அணியில் ருதுராஜ் இல்லாதது பெரிய இழப்பு. இந்த சீசனில் இதுவரை தொடர்ச்சியாக சிறந்த முறையில் நாங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை ஏற்கும் முதல் நபர் நானாக இருப்பேன். அதே நேரத்தில் அணியின் பலம் மற்றும் திறனை வைத்து பார்க்கும் போது பிளே-ஆப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

_________________________________________________________________________________________

கோலி வரலாற்று சாதனை

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற  போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. டில்லிக்கு எதிரான  போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 14 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்த போட்டியில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஐ.பி.எல். வரலாற்றில் 1000 பவுண்டரிகள் (721 போர்கள், 279 சிக்ஸர்கள்) அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் அதிக ஃபோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி, அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி இன்னும் ஒரு அரைசதம் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 100 அரைசதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவரைச் சேரும். டி20 போட்டிகளில் 100 அரைசதங்களுடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து