முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் முடிவெடுப்பதற்கு முன் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது விவேகமானது என்று தெரிவித்துள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கவர்னர்கள் ஆகியோருக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கவர்னருக்கு எதிரான தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட் தொடர்ந்த வழக்கில், கடந்த 8-ம் தேதி சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பினை வழங்கிய நிலையில், 415 பக்க தீர்ப்பு நகலை அனைத்து மாநில கவர்னர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நகலை ஏப்ரல் 11-ம் தேதி நள்ளிரவில் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில பேரவை அனுப்பும் மசோதாக்களை நிறைவேற்றாமல் தாமதப்படுத்த கவர்னருக்கு வீட்டோ(தனி) அதிகாரம் என ஏதுமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

அரசியலமைப்பின் 201 வது பிரிவின் கீழ், ஒரு மசோதா மீது முடிவெடுக்க காலவரம்பு எதுவும் ஜனாதிபதிக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், 3 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும். மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து, ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கவர்னர்கள் ஆகியோருக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிடில், சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் நீதிமன்றங்களை அணுகலாம். நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்காவிடில் நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்காது என கூறியுள்ளது.

கேரளம், பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் அளிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளதால் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து