முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் 49,542 பேருக்கு ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      தமிழகம்
CM Stalin 2024-12-10

Source: provided

சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். ரூ.44 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டிடத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025 நாளை (ஏப்ரல் 14-ம் தேதியன்று) அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் தலைமையில் "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

தொடர்ந்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் 227 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கான 18 விடுதிக் கட்டிடங்கள், 46 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் 1000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார். மேலும் அவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 48,436 பயனாளிகளுக்கு 104 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில் மொத்தம் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 332 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். மேலும் அவர் தமிழாக்கம் செய்யப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் இரண்டு நூல்களையும், வன உரிமைச் சட்டத்திற்கான வரைபடத்தையும் வெளியிட உள்ளார்.

இவ்விழாவில், பிரகாஷ் அம்பேத்கர் சிறப்புரையாற்ற உள்ளார். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து