முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை காங். தலைவராக ராகுல்: எம்.பி.க்கள் கோரிக்கை

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை. 28  - மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் பரிந்துரை செய்துள்ளனர்.  முன்னாள் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். அவர் ஜனாதிபதியாகி விட்டதால் அந்தப் பதவி இப்போது காலியாக உள்ளது. இந்த நிலையில் ராகுலுக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு 10 எம்.பி.க்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, 

நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. ராகுல் காந்தி மக்களவையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறோம். எனவே அவரை மக்களவை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை மக்களவையில் ராகுல் திறமையாக எடுத்து வைப்பார் என்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களை கவரும் வகையில் அவரது செயல்பாடுகள்இருக்கும் என்றும் நம்புகிறோம். எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சவால்களை ராகுல் திறமையாக கையாள்வார். சுமார் 50 சதவீத இளைஞர்களை கொண்ட நமது நாட்டில் துடிப்பான இளைஞர்கள் உயர் பதவிக்கு வர வேண்டும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. இதனடிப்படையில் வருங்காலத்தில் சிறந்த தலைவராக வருவதற்கும், இளைஞர்களை கவருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் காங்கிரசின் பலமும் அதிகரிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago