முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஆக. - 13 - பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து எல்.கே. அத்வானி மேலும் கூறியிருப்பதாவது,  பாராளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவை இரண்டுக்குமே நிரந்தரமான பதவிக்காலம் இருக்க வேண்டும். இதற்கு ஜனாதிபதி முன் முயற்சி எடுக்க வேண்டும். அடிக்கடி தேர்தல் நடத்தினால் முடிவெடுப்பது பாதிக்கப்படும். பாராளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி நான் பிரதமருடன் விவாதித்தேன். இப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடனும் விவாதித்தேன். இருவருமே எனது யோசனையை வரவேற்று கருத்து தெரிவித்தார்கள். 

பாராளுமன்றமோ, அல்லது சட்டமன்றமோ இடையில் கலைக்கப்பட கூடாது. அவற்றுக்கு நிரந்தர பதவிக்காலம் இருக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தி கூறிய அத்வானி, தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். எனவே தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வரவும் ஜனாதிபதி முன் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு ஐந்தாண்டின் முடிவிலும் லோக்சபைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அத்வானி வலியுறுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 6 ஆண்டுகள் பதவியில் இருந்த போது நிலுவையில் உள்ள அத்தனை தேர்தல்களையும் நடத்தினோம். அதனால் எங்களுக்கு ஒரு புதிய அனுபவமே கிடைத்தது. இது நாட்டுக்கு நல்லதல்ல என்பது என் கருத்து. எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுக்க முடியாமல் போய் விடும். எனவே லோக்சபை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எல்.கே. அத்வானி வலியுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்