முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் துப்பாக்கிசூட்டில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணஉதவி

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

திருச்செந்தூர், செப். - 12 - போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகையை அமைச்சர்கள் ஜெயபால், சி.த.செல்லப் பாண்டியன் ஆகியோர் வழங்கினர். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மணப்பாடு கிராமம் ராஜா தெருவைச் சேர்ந்த அந்தோணி ஜாண் (வயது 47) குண்டடிப்பட்டது. காயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்ரூ அமைச்சரின் பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க முதல்ரூ அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து இறந்த அந்தோணி ஜாணின் தம்பி குமார் என்பவரிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகுயோர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார், திருச்செந்தூர் தாசில்தார் சங்கரநாராயணன், சாத்தான்குளம் சமூகநல திட்ட தாசில்தார் இளங்கோ, திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் கோபால், அ.தி.மு.க. மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் ஜெனிபர் சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, திருச்செந்தூர் கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், உடன்குடி யூனியன் தலைவி மல்லிகா, திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்பாபு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் லிங்ககுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago