முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை டெஸ்ட்: புஜாரா சதத்தால் சரிவில் இருந்து மீண்டது

சனிக்கிழமை, 24 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 24 - இங்கிலாந்து அணிக்கு எதிராக மும் பையில் நடந்து வரும் 2 -வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சி ல் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்னை எடுத்து உள்ளது. 

இந்தப் போட்டியில் புஜாராவின் அபார சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. அவருக்குப் பக்கபல மாக அஸ்வின் நன்கு ஆடி அரை சதம் அடித்தார். 

இந்திய அணி ஒரு கட்டத்தில் 119 ரன்னி ல் 5 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. பின்பு புஜாரா, தோ னி மற்றும் அஸ்வின் ஆகியோரது ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு கெளரவமான ஸ்கோரை எட்டியது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், 2-வது சுழற் பந்து வீச் சாளராக மான்டி பனேசர் பங்கேற்றார். அவர் தனது பணியை கச்சிதமாக செய்தார். 4 முக்கிய விக்கெட்டை அவர் வீழ்த்தினார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் நேற்று துவங்கியது. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசி ல் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டி ங்கை தேர்வு செய்தது. சேவாக்கும், காம்பீரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் களம் இறங்கிய இந் திய அணி ரன் எடுக்க தடுமாறியது. இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடி வில் முதல் இன்னிங்சில், 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்னை எடு த்தது.  

இந்திய அணியின் இன்னிங்சில் புஜா ரா சதம் அடித்தது முதல் நாள் ஆட்டத் தின் சிறப்பம்சமாகும். அவர் 279 பந்தி ல் 114 ரன்னை எடுத்து ஆட்டம் இழக் காமல் இருக்கிறார். இதில் 10 பவுண்ட ரி அடக்கம். 

8 - வது வீரராக இறங்கிய அஸ்வின் புஜாராவுடன் இணைந்து நன்கு ஆடி வருகிறார். அவர் 84 பந்தைச் சந்தித்து 60 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 9 பவுண்டரி அடக் கம். 

தவிர, துவக்க வீரராக இறங்கிய சேவா   க் 43 பந்தில் 30 ரன்னை எடுத்தார். இதி ல் 4 பவுண்டரி அடக்கம். கேப்டன் தோனி 64 பந்தில் 29 ரன் எடுத்தார். இதி ல் 4 பவுண்டரி அடக்கம்.

இந்திய அணியின் ஸ்கோர் 4 ஆக இருந் த போது, காம்பீர் ஆட்டம் இழந்தார். 52 ல் சேவாக்கும், 60 ல் டெண்டுல்கரு ம், 118 ல் கோக்லியும், 119 ல் யுவராஜ் சிங்கும், 169 ல் தோனியும் அவுட்டா  னார்கள். 

இங்கிலாந்து அணியின் சுழற் பந்து வீச் சாளரான பனேசர், சேவாக், டெண்டுல் கர், கோக்லி மற்றும் கேப்டன் தோனி ஆகியோரை வீழ்த்தியது குறிப்பிடத்தக் கது. ஸ்வான் பந்தில் யுவராஜ் சிங்கும், ஆண்டர்சன் பந்தில் காம்பீரும் ஆட்டம் இழந்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், பனேசர் 91 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கைப்ப ற்றினார். தவிர, ஆண்டர்சன் 1 விக்கெட்டும், ஸ்வான்  1 விக்கெட்டும் எடுத்த னர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago