முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் அமித்ஷா தலையிடுகிறார் - மம்தா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 16 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் அமித்ஷா தலையிடுகிறார் என்று மம்தா பேனர்ஜி குற்றம் சாட்டினார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் விபத்து காரணமாக காலில் காயம் ஏற்பட்ட மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களாக சர்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் மம்தா பானர்ஜி சர்க்கர நாற்காலியில் அமர்ந்தபடி பன்குரா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பேசுவதற்கு முன் இந்து கடவுள் துர்க்கை அம்மன் மந்திரத்தை அவர் கூறினார். பின்னர் மம்தா கூறுகையில்

உள்துறை அமைச்சர் நாட்டை நடத்துகிறாரா? அல்லது யாரை கைது செய்யவேண்டும் அல்லது அடிக்க வேண்டும் என முடிவு செய்கிறாரா? அல்லது எந்த துறை யாரை துரத்த வேண்டும் என முடிவு செய்கிறாரா?

தேர்தல் ஆணையத்தை நடத்துவது யார்? இதை அமித்ஷா நீங்கள் நடத்தவில்லை என நான் நம்புகிறேன். எங்களுக்கு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெற வேண்டும். அமித்ஷா தேர்தல் ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுகிறார் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து