எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 15 - அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், மதிமுகவில் பணியாற்றி வரும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 250 பேர் கழகத்தில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும, தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நேற்று (14.12.2012 வெள்ளிக் கிழமை), மதிமுகவில் பணியாற்றி வரும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 250 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், மதிமுகவைச் சேர்ந்த பொறியாளர் அணி துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட அவைத் தலைவருமான லட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி வசந்தம் சரவணன், சட்டத் துறை துணைச் செயலாளர் மதுரை ஆசைத்தம்பி, சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், மாநில சட்டத் துறை துணைச் செயலாளரும், வடுகபட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சி.ஜெ. பிலிப்சன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொன்னியின் செல்வன், சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் திரு. புதுவயல் சுப்பிரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்கால் சக்திவேல் உடையார், தென் சென்னை மாவட்ட அவைத் தலைவர் ஹைடெக் மனோகரன், மாவட்டப் பொருளாளர் ஈகை செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 125 நிர்வாகிகள் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், மதிமுகவைச் சேர்ந்த தென் சென்னை மாவட்டம், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் என்.எஸ். விஜயன், திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் பார்த்தசாரதி, சட்டத் துறை துணைச் செயலாளர் திருவள்ளூர் சிவ. சண்முகம், சட்டத் துறை துணைச் செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளருமான கே.வி. சுரேஷ், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியச் செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரும், நாகர்கோவில் நகர மன்ற 1ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.வி. உதயகுமார், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு. அய்யங்காளை, பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், கோவை 4ஆவது பகுதிச் செயலாளர் பிட்டா ரங்கநாதன், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரச் செயலாளர் பசும்பொன் மனோகரன், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் கண்ணபிரான், தலைமைக் கழக சொற்பொழிவாளர் பழனி குமணன், தென் சென்னை மாவட்டம், பொதுக்குழு உறுப்பினர் அன்னை டேவிட் உள்ளிட்ட 125 நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்.
ஆக மொத்தம் மதிமுகவைச் சேர்ந்த 250 நிர்வாகிகள் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வுகளின் போது, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் உடன் இருந்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, மதிமுகவில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கான கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, ம.தி.மு.க.வில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசுகையில், இன்று அன்பு சகோதரர், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் ஏற்பாட்டின்படி, ம.தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைய வந்துள்ள உங்கள் அனைவரையும், கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் அன்புடன் வருக! வருக! என வரவேற்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவு. நீnullங்கள் வந்த இடம் நல்ல இடம். எத்தகைய நம்பிக்கையுடன் இன்று கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை வீண்போகாது என்பதை தெரிவித்து, நம்முடைய லட்சியம் கல்லாமை, இல்லாமை இல்லாத ஒரு தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும். மக்களுக்காகவே இயங்குகின்ற ஒரு இயக்கம் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நாம் போராடிப் பெற வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நீnullங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம் என்று உரையாற்றினார்.
கருணை உள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக,
கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
அ.தி.மு.க.பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உள்ளிட்டோர் பெருந்திரளாகத் திரண்டிருந்ததோடு, சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வரவேற்புப் பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு, கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளை தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் ஆங்காங்கே திரண்டிருந்து மகத்தான வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-12-2024.
16 Dec 2024 -
மயோட்டே தீவை தாக்கிய புயல்: ஆயிரத்தை தாண்டும் உயிரிழப்பு
16 Dec 2024மயோட்டே: இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது.
-
திருமாவளவனுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறதா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
16 Dec 2024மதுரை: திருமாவளவனுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறதா..? என்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: தெற்கு காசாவில் 20 பேர் பலி
16 Dec 2024ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் தெற்கு காசாவில் 20 பேர் பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
வங்கக்கடலில் உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது
16 Dec 2024சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1.7 கி. மதிப்பில் தங்கம் பறிமுதல்
16 Dec 2024சென்னை : துபாயில் இருந்து ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த சம்பவத்தில், விமான ஊழியர் உள்பட இருவர் கைது
-
அந்த நாள் விமர்சனம்
16 Dec 2024நாயகன் ஆர்யன் ஷாம், தனது புதிய திரைப்படத்தின் கதை விவாதத்திற்காக இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட குழுவுடன் ஈசிஆரில் உள்ள பஞ்சமி பங்களாவுக்கு செல்கிறார்.
-
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய குகேஷுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு
16 Dec 2024சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
1971 பாக்., போரில் இந்தியா வெற்றி: வீரர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
16 Dec 2024புதுடெல்லி: 1971 பாக்., போரில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த வீரர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினர்.
-
திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேர் கைது
16 Dec 2024திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
-
3-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் அபாரம்: இங்கிலாந்து அணிக்கு 658 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து
16 Dec 2024ஹேமில்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்களை மெகா இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
-
எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜூனா பேட்டி
16 Dec 2024சென்னை, எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று வி.சி.க.வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
-
குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் பலி
16 Dec 2024கோவை : குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோவில் நிர்வாகி விளக்கம்
16 Dec 2024ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோவில் நிர்வாகி விளக்கமளித்துள்ளார்.
-
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க தமிழக கவர்னர் ஒப்புதல்
16 Dec 2024சென்னை : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, மாநிலத்துக்கென தனி ஆணையத்தை அமைக்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
-
குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கோரி தஞ்சையில் போராடிய 55 விவசாயிகள் கைது
16 Dec 2024தஞ்சாவூர்: குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரக்கோரி தஞ்சாவூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பி.ஆர்.
-
பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கியது காங்கிரஸ் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
16 Dec 2024டெல்லி: அரசியலமைப்பில் காங்கிரஸ் செய்த முதல் திருத்தமே பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கியது காங்கிரஸ் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
மிஸ் யூ விமர்சனம்
16 Dec 2024ஒரு பெரும் விபத்தால் தலையில் அடிபட்டு கடைசி இரண்டு வருடங்களின் நினைவுகளை இழந்துவிடுகிறார் நாயகன் சித்தார்த், அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாயகி ஆஷிகா ரங்கநாத்தை கண்
-
ராணிப்பேட்டையில் ரூ.1500 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
16 Dec 2024சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் ரூ.1500 முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டால
-
அதிபர் பதவி நீக்கம்: தென்கொரியா மக்கள் கொண்டாட்டம்
16 Dec 2024சியோல், அதிபர் பதவி நீக்கத்தை தென்கொரியா மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
-
மணிப்பூரில் 2 பீகார் தொழிலாளர்கள் கொலை: நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பைரேன் சிங்
16 Dec 2024இம்பால் : மணிப்பூரில் 2 பீகார் தொழிலாளர்கள் கொலை விவகாரத்தில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை முதல்வர் பைரேன் சிங் அறிவித்துள்ளார்.
-
அரசு பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் திசநாயகா பிரதமர் மோடியுடன் சந்திப்பு
16 Dec 2024புதுடெல்லி: 3 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் திசநாயகா பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
மருத்துவர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன்: மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த திட்டம்
16 Dec 2024கொல்கத்தா: பெண் மருத்துவர்கள் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள்
-
வருகிற 19-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள்
16 Dec 2024திருவனந்தபுரம் : வரும் 19-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எதிர்ப்பு
16 Dec 2024சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.