முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் ஆசிய ஹாக்கியில் சாம்பியன்: இந்திய வீராங்கனைகளுக்கு பரிசு தொகை அறிவிப்பு

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      விளையாட்டு
Woman Hokey 2024-11-11

Source: provided

மஸ்கட் : ஜூனியர் ஆசிய ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அரையிறுதி...

9-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது.இதில் நடந்த முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்னொரு அரையிறுதியில் சீனா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி றுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

ஷூட் அவுட் முறை... 

நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

பரிசுத்தொகை அறிவிப்பு...

இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியை ஊக்குவிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.2 லட்சம் எனவும், ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து