முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் 2 பீகார் தொழிலாளர்கள் கொலை: நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பைரேன் சிங்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      இந்தியா
Brain-Singh 2023 06 10

Source: provided

இம்பால் : மணிப்பூரில் 2 பீகார் தொழிலாளர்கள் கொலை விவகாரத்தில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை முதல்வர் பைரேன் சிங் அறிவித்துள்ளார்.

மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் நிவாரணம் மற்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பயங்கரவாத செயல் நமது மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதலாகும். மேலும் தொழிலாளர்களை இழந்து துயருற்றிருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைப்பட்டால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து