முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு எல்லா உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது : உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      தமிழகம்
Gukesh 2024-12-16

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி எல்லா சூழலிலும் உதவியாக இருந்தனர் என்று தெரிவித்துள்ள உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இளம்வயதில் உலக செஸ் சாம்பியனானதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இளம்வயதில்... 

முன்னதாக நேற்று உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- உலக செஸ் சாம்பியன்ஷிப் விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. சிறிய வயதில் இருந்தே ஆசைப்பட்டது நிறைவேறிய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இளம்வயதில் உலக சாம்பியனானதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடினமாக இருந்தது...

ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியது கடினமாக இருந்தது; டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். நானே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். செஸ் ஒரு அழகான விளையாட்டு; அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும். திட்டம் சரியாக இருந்தால், வெற்றி அடையலாம்.

எல்லா உதவிகளை... 

எனக்கு தேவையான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தது. முதல்வர்  மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் இருவரும் எல்லா சூழலிலும் தேவையான நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர். அவர்களுக்கு நன்றி. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரை அரசு நடத்தியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து