முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: முதல் இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம் : 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

445 ரன்களில் அவுட்.... 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஜெய்ஸ்வால்-கில்...

இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெய்ஸ்வால், அடுத்த பந்திலும் பவுண்டரி அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில் சுப்மன் கில்லும் ஸ்லிப்பில் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.

மழைக்குறுக்கீடு...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் கே.எல்.ராகு. தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. ரிஷப் பண்ட்டும் (9 ரன்கள்) தாக்குப்படிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. அடிக்கடி மழை குறுக்கிட்டதால் நேற்றைய நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

4 விக்கெட்டுகள்... 

மழை பாதிப்பு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. முடிவில் இந்திய அணி 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும், கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, ஆஸ்திரேலியாவை விட 394 ரன்கள் பின் தங்கியுள்ளது. பாலோ ஆன் ஆவதை தவிர்க்கவே இந்திய அணிக்கு இன்னும் 194 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

2 நாட்கள் மட்டும்...

இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்தியா அணியின் விக்கெட்டை விரைவில் கைப்பற்றி சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலியா முயற்சிக்கும். அதே சமயம், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதால், போட்டியை டிரா நோக்கி கொண்டு செல்ல இந்திய அணி முயற்சிக்கும். இதனால் இன்று நடைபெறும் 4-வது நாள் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து