முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் அபாரம்: இங்கிலாந்து அணிக்கு 658 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      விளையாட்டு
England 2024-11-11

Source: provided

ஹேமில்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்களை மெகா இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

143 ரன்களில்... 

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டது. 204 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து இருந்தது. வில்லியம்சன் 50 ரன்னும், ரவீந்திரா 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வில் யங் 60 ரன் எடுத்தார். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.

வில்லியம்சன்... 

முன்னாள் கேப்டன் வில்லியம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 137 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். 105-வது டெஸ்டில் விளையாடும் வில்லியம்சனுக்கு இது 33-வது சதமாகும். அவர் 156 ரன் குவித்து அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து 453 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து