முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது : பேராலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்ச்சி

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Christian 2024-02-14

Source: provided

சென்னை : சாம்பல் புதன் எனப்படும் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்த காலத்தை கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இதனை லெந்து காலம், தபசு காலம் என்று கூறுவது உண்டு. சாம்பல் புதன் கிழமையான நேற்று முதல் இந்த நாட்கள் தொடங்கியது. லெந்து காலத்தில் பிரவேசிக்கும் கிறிஸ்தவர்கள் நேற்று முதல் வரும் 40 நாட்கள் அர்ப்பணிப் போடும், உபவாசத்தோடும் நினைவு கூறுவார்கள். இந்த நாட்களில் தங்களை வெறுத்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார்கள். 

கொண்டாட்டங்களை தவிர்த்து பயபக்தியோடு ஆராதனையில் பங்கு பெறுவார்கள். சாம்பல் புதன் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் கத்தோலிக்க திருச்சபைகளில் நேற்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் நடந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பாதிரியார் சபை மக்களின் நெற்றியில் பூசினர். சிலுவையின் அடையாளமாக இடும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

புகழ் பெற்ற சாந்தோம் ஆலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயம், பெரம்பூர் லூர்து ஆலயம், மாதவரம் அந்தோணியார் ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.  இதே போல சி.எஸ்.ஐ. இ.சி.ஐ. மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து உள்ளிட்ட திருச்சபைகளில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.  

.இதைத் தொடர்ந்து வரும் 6 வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு தவக்காலம் முன்னதாக தொடங்கி விட்டதால் இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31-ம் தேதி வருகிறது. 

நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நேற்று காலையில் நிறைவேற்றப்பட்டது.  குருத்தோலைகளை எரித்து அதில் இருந்து சாம்பல் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. 

திருப்பலியில் வைக்கப்பட்டிருந்த சாம்பல் அடங்கிய கிண்ணங்கள்  புனிதம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பேராலய அதிபர் இருதயராஜ், உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோர் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசினர். தவக்காலம் தொடங்கியதை யொட்டி பேராலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து