முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு காவல் வரும் 24-ம் தேதி வரை நீட்டிப்பு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Brajwal-Revanna 2024-04-30

Source: provided

பெங்களூரு : பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவர். பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

பிரஜ்வலை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31ம் தேதி பெங்களூருவுக்கு வந்து போலீசாரிடம் சரண் அடைவதாக வீடியோ மூலம் அவர் அறிவித்தார். இதையடுத்து கடந்த 31ம் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த காவல் முடிந்தவுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மேலும் 4 நாட்கள் அவருக்கு போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் (வரும் 24ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து