முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தொடரும் தடை

புதன்கிழமை, 26 ஜூன் 2024      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் நீர்வரத்து  அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும். 

மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவிகளில் குளிப்பதற்கும், குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழையில் நனைவதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருகை தருவார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்களின் நலன் கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 24-ம் தேதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை அதிகமாக பெய்வதால் அருவிகளில் குளிக்க தடை நேற்று முன்தினம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் நேற்றும் 3-வது நாளாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து