முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேட்டோ அமைப்பின் பொது செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமனம்

புதன்கிழமை, 26 ஜூன் 2024      உலகம்
NATO 2024-06-26

வாஷிங்டன், நேட்டோ அமைப்பின் பொது செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு. மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும். இந்த 32 நாடுகளில் ஒரு நாடு மீது இந்த அமைப்பில் இல்லாத நாடு தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்தமாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும்.

இந்த பாதுகாப்பான நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பிரதமர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான நேரத்தில் மார்க் ரூட்டே பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருக்கிறார். ஜூலை 9 மற்றும் 11-ந்தேதி வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் புதின் மற்றும் மற்ற நாட்டின் அதிபர்கள் அதிகாரப்பூர்வமாக அவர் வரவேற்பார்கள்.

தற்போது பொதுச் செயலாளரான இருக்கும் நர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ந்தேதி முடிவடைகிறது. அக்டோபர் 1-ந்தேதி மார்க் ரூட்டே பொதுச் செயலாளராக பதவி ஏற்பார். ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 10 வருடத்திற்கு மேல் இந்த பதவியில் நீடித்தார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ல் படையெடுத்தபோது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து