முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் : ஜக்கிய ஜனதா தள கட்சி தீர்மானம்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      இந்தியா
nitish-kumar

Source: provided

பாட்னா : பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித் தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபாவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 12 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் பா.ஜ., கூட்டணி தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கின்றனர். நேற்று (ஜூன் 29) பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மத்திய அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் தே.ஜ., கூட்டணி அரசுக்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால், கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா? என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து