முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      உலகம்
Russia 2024-06-30

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

ரஷ்யாவின் மாஸ்கோ புறநகர்ப் பகுதியான பாலாஷிகா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வெளிநாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர். அந்த விடுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. 

பின்னர் தீ மளமளவென கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டிடத்தில் தீப்பிடித்ததால் மாடியில் தங்கி இருந்த பலரும் உயிர் பயத்தில் ஜன்னல் வழியாக குதித்தனர். இதில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். அவர்களது சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

மற்றொருபுறம் அந்த விடுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. அதன்படி ஏணி மூலம் மீட்பு படையினர் ஏறிச் சென்று அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகினர். சிலர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து