முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் சிலை எரிப்பு: போலீசார் குவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      இந்தியா
Andhra 2024-06-30

Source: provided

திருப்பதி : ஆந்திராவில் முன்னாள்  முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் சிலை முழுவதும் எரிந்து கருகியது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

ஆந்திர முன்னாள் முதல்வராக  இருந்தவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. கடந்த 5 ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார். அப்போது அவரது தந்தை ராஜசேகர ரெட்டிக்கு ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சிலைகளை நிறுவினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது முதல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பாப்பரட்டலா மாவட்டம் அட்டை பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் சிலை முழுவதும் எரிந்து கருகியது.

இதனைக் கண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினர் சிலைக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் ஆந்திரா முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து