முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுமுறை தினம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      தமிழகம்
Koorala-Falls 2024-07-14

Source: provided

தென்காசி : நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். 

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தினங்களுக்கு முன்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால், அருவிகளில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன், நேற்று விடுமுறை தினம் என்பதால், அருவிகளில் மக்கள் குவிந்தனர். மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன், ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து