முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யா’ அல்ல ‘யெஸ்’ சொல்லுங்கள்: சுப்ரீம் கோர்ட் காபிஷாப் இல்லை: மனுதாரரை எச்சரித்த தலைமை நீதிபதி

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      இந்தியா
Chandrashut 2024-03-17

Source: provided

புதுடெல்லி : 'யா' அல்ல 'யெஸ்' என்று சொல்லுங்கள். சுப்ரீம்கோர்ட்  ஒன்றும் காபி கடை அல்ல என்று மனுதாரர் ஒருவரை தலைமை நீதிபதி எச்சரித்த சம்பவம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நிகழ்ந்தது. 

மனுதாரர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அடிப்படை உரிமை மீறல்களுக்காக சுப்ரீம்கோர்ட்டில் நேரடியாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் பிரிவு 32-ன் கீழ் அவர் தனது மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தன்னை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாகவும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 

அவரது மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அடிப்படை உரிமை மீறல்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் பிரிவு 32, இந்த மனுவுக்கு பொருத்தமானதா என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். 

முன்னாள் நீதிபதியை எதிர்மனுதாரராக வைத்து எப்படி பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் நீதிபதி விஷயத்தில் கண்ணியம் இருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த மனுதாரர், யா, யாஅப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். நிவாரணம் பெறுவதற்காக மனு தாக்கல் செய்யலாம் என எனக்கு சொல்லப்பட்டது என்று பதிலளித்தார்.

மனுதாரர், சாதாரண மொழியைப் பயன்படுத்தியதால், அதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, யா யா என்று சொல்லாதீர்கள். யெஸ், யெஸ் என்று சொல்லுங்கள். இது காபி ஷாப் அல்ல. இதுபோன்று யா, யா என்று பேசுபவர்களோடு எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு என தெரிவித்தார். 

மேலும், நீதிபதி கோகோய் இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர். நீதிபதிக்கு எதிராக இது போன்ற மனுவை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. அதோடு, இந்த அமர்வு உங்கள் மனுவை ஏற்காததால் நீங்கள் உள் விசாரணையை நாட முடியாது. 

ஓய்வு பெற்ற நீதிபதி கோகோயின் பெயரை மனுவில் இருந்து முதலில் நீக்குங்கள். அதன் பிறகு உங்கள் மனுவை பதிவுத்துறை பரிசீலிக்கும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து