முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் மழை எதிரொலி: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      தமிழகம்
Okenakkal 2023-08-17

Source: provided

தருமபுரி : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நேற்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக  அதிகரித்துள்ளது. 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கடுமையாக சரிந்து வந்தது. இந்த நிலையில் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது. 

நேற்று முன்தினம் இரவு 7 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து நேற்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13,000 கனஅடியாக உயர்ந்தது. 

 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து