முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      இந்தியா
Sanjay-Roy 2024-10-07

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது சஞ்சய் ராய்தான் என குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 200 பேரிடம் விசாரணை நடத்தி, அதனைப் பதிவு செய்து குற்றப் பத்திரிகையாக சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நேற்று (அக். 7) தாக்கல் செய்தது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஆக. 9ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில், கல்லூரியில் ஒப்பந்த ஊழியராக, காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிவரும் சஞ்சய் ராய் என்பவர் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து காவல் துறையிடமிருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியது. இதில் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர்கள், மருத்துவர்கள், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.

விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களை வெளியிட சி.பி.ஐ. மறுப்பு தெரிவித்திருந்தது. பெண் மருத்துவா் கொலை தொடா்பாக சி.பி.ஐ. அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளதாகவும், அந்த விவரங்களை வெளியிடுவது சி.பி.ஐ. விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட், அதனை வெளியிட முடியாது என திட்டவட்டமாகக் கூறியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 200 பேரிடம் விசாரணை நடத்தி சேகரிக்கப்பட்ட தகவல்களை குற்றப்பத்திரிகையாக சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நேற்று தாக்கல் செய்தது. அதில், பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது சஞ்சய் ராய்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து