Idhayam Matrimony

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடியுடன் சந்திப்பு

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      இந்தியா
Modi 2024-10-07

Source: provided

புதுடெல்லி : இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில் 5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

மனைவி சஜிதாவுடன் தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார். அதனை தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

மாலத்தீவு அதிபரும், அவரது மனைவியும் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அவர்களை ஜனாதிபதி திரெளபதி முர்மு வரவேற்றார். முகமது முய்சுக்கும், அவரதுமனைவி சஜிதாவுக்கும் ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரி வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.

பின்னர் மாலத்தீவு அதிபர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கும் உடன் சென்றார். இதன் பிறகு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

அவரை கை குலுக்கி வர வேற்று பிரதமர் மோடி அழைத்து சென்றார். பின்னர் மோடியும்-முகமது முய்சுவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு நாடுகள் இடையேயான பரஸ்பர நலன், மேம்பாடு, உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜூன் மாதம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் கலந்து கொண்டாலும் இதுவே அவரது முதல் அரசு பயணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து