முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பயி சோரனின் உடல்நிலை குறித்து விசாரித்தார் பிரதமர்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      இந்தியா
Modi-1 2024-01-17

Source: provided

ராஞ்சி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைபேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார் 

சமீபத்தில் பாஜகவில் இணைந்த மூத்த தலைவர் சம்பயி சோரன் கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜம்ஷெட்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோரனை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தத்தில் இருந்த சர்க்கரையின் அளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

பிரதமர் மோடிமருத்துவமனையில் உள்ள சம்பயி சோரனை தொலைபேசியில் அழைத்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார் என்று முன்னாள் முதல்வரின் நெருங்கிய உதவியாளர் கூறினார். பிரதமரின் அழைப்புக்கு சம்பயி சோரன் நன்றி தெரிவித்துள்ளார். தான் மிகவும் நன்றாக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ஜேஎம்எம் தலைவர்களும் அவர் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தனர். சோரனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் டாடா மெயின் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து