முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலியின் சாதனை முறியடிப்பு

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

குவாலியர் : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில்  விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா முறியடித்துள்ளார்.

இந்தியா வெற்றி...

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 11.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

மாபெரும் சாதனை... 

இந்தியா தரப்பில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். குறிப்பாக தஸ்கின் அகமது வீசிய 12வது ஓவரின் 5வது பந்தில் பாண்ட்யா அதிரடியான சிக்சரை பறக்க விட்டு போட்டியை முடித்தார். இதன் மூலம் பாண்ட்யா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, ஹர்திக் பாண்ட்யா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 முறை சிக்சருடன் போட்டியை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சிக்சருடன் போட்டியை முடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.

3-வது இடத்தில்... 

இதற்கு முன் விராட் கோலி அதிகபட்சமாக 4 போட்டிகளில் சிக்சருடன் பினிஷிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ் டோனி மற்றும் ரிஷப் பண்ட் (தலா 3 முறை) ஆகியோர் அந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து