முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

பெங்களூரு : பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா 462 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. இன்று போட்டியின் கடைசி நாள் ஆகும்.

முதல் நாள் ஆட்டம்....

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

46 ரன்களுக்கு அவுட்....

முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா  3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

சர்பராஸ் - ரிஷப்... 

இந்நிலையில் நேற்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் அபாரமாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் கே.எல்.ராகுல் 12 ரன், ஜடேஜா 5 ரன், அஸ்வின் 15 ரன், பும்ரா மற்றும் சிராஜ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இன்று போட்டியின் கடைசி நாளாகும்.

மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 4-வது நாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்ற பிறகு ஆட்டம் தொடர்ந்தது.

சச்சின் பாராட்டு

சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, வாழ்க்கையின் வேர்களை அடைய கிரிக்கெட்டும் ஒரு வழியாகும். பெங்களூர் மண்ணிற்கும் ரச்சின் ரவீந்திராவுக்கும் ஸ்பெஷலான தொடர்பு உள்ளது. நியூசிலாந்து அணிக்காக விளையாடினாலும், அவரின் குடும்பம் பெங்களூரை சேர்ந்தது. இன்று அதே மைதானத்தில் சதம் அடித்துள்ளார். அதேபோல் சர்பராஸ் கான். இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் போது, உங்கள் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தது என்ன ஒரு சந்தர்ப்பம். இரு திறமையான பேட்ஸ்மேன்களுக்கும் சுவாரஸ்யமான காலம் காத்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து