முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி டிராபி தொடர்: 674 ரன்கள் குவித்து தமிழகம் டிக்ளேர்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      விளையாட்டு
Sai-Sudarsan 2024-10-18

Source: provided

டெல்லி : ரஞ்சி டிராபி தொடரில் 674 ரன்கள் குவித்து தமிழகம் டிக்ளேர் செய்துள்ளது. தமிழகம் அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர்.

லீக் ஆட்டத்தில்... 

நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் டி பிரிவில் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழகம் - டெல்லி அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது.

ஜெகதீசன் அரைசதம்... 

இதையடுத்து தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக இன்னிங்சை தொடங்கினர். இதில் ஜெகதீசன் அரைசதம் அடித்த நிலையில் 65 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கினார். சுந்தர் - சாய் சுதர்சன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

சாய் சுதர்சன் அபாரம்...

இந்த இணையை பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் 88 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 379 ரன்கள் எடுத்திருந்தது. தமிழகம் தரப்பில் சாய் சுதர்சன் 202 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னுடம் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் நவ்தீப் சைனி 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். நேற்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

674 ரன்கள் குவிப்பு... 

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 158.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் ஹிமான்ஷு சவுகான், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து டெல்லி அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து