முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் தீவிரம் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      உலகம்
Lebanon 2024-10-18

Source: provided

காசா : இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர்  07-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், காசாவில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 16-ம் தேதி, காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரபா மாவட்டத்தில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் பயங்கரவாத தலைவர் யாஹ்யா சின்வார்,  கொல்லப்பட்டார். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளது.

யஹ்யா சின்வரை இழந்து விட்டாலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்று ஹமாஸ் உறுதியேற்றுள்ளது. இதையடுத்து அடுத்த தலைவரை நியமிக்கும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. 

இதன்படி கத்தாரில் இருக்கும் ஹய்யா என்பவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு யுத்தத்தை நடத்துவது சரியாக இருக்காது யுத்த களத்தில் இருந்து செயல்படுபவரே அடுத்த தலைவராக வர அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

எனவே கொல்லப்பட்ட யஹ்யா சின்வரின் இளைய சகோதரர் முகம்மது சின்வரை அடுத்த ஹமாஸ் தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தவிர மேலும் சிலரின் பெயரும் பட்டியலில் இருப்பதால் விரைவில் ஹமாஸ் தலைவர் பெயர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து