முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் கைதை தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க  மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட் கிளையில்  தாக்கல் செய்த மனுவில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தினமும் நடைபெறும் ஒன்றாகி விட்டது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த, இந்திய கடற்படை கப்பல், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டில் இருந்து, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதையும், வலைகளைப் பறித்து, படகுகளை பறிமுதல் செய்து, கைது செய்வதை தடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கவுரி அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

முன்னதாக விசாரணையின் போது, மனுவில், பிரதமரின் முதன்மை செயலரை வழக்கில் தேவையின்றி சேர்த்துள்ளதாகவும், அவரை வழக்கிலிருந்து நீக்குமாறும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், 

பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினால் மீனவர் பிரச்சினை சரியாகும் என மனுதாரர் நினைக்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை. பிரதமரின் முதன்மைச் செயலர் வழக்கில் சேர்க்கப்பட்டதில் என்ன தவறு? வேண்டுமானால் ஏன் பிரதமரின் முதன்மை செயலரை இந்த வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என்பது தொடர்பான காரணத்துடன் மனுத்தாக்கல் செய்யுங்கள் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து