முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீரில் அமைச்சரவை தீர்மானத்துக்கு கவர்னர் மனோஜ் சின்ஹா ஒப்புதல்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      இந்தியா
Manoj-Sinha 2024-10-19

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தி முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் வியாழக்கிழமை கூடிய அமைச்சரவை, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை அதன் அசல் தன்மையுடன் மீட்டெடுப்பதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. அமைச்சரவை நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்துக்கு துணைநிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது என்பது, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடையாளத்தை, அதன் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுப்பதற்கான நடைமுறையின் முதல் செயல்முறையாகும்.

மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் விவகாரத்தினை பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசிடம் கொண்டு செல்வதற்கான முழு உரிமையையும் அமைச்சரவை முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளத்தையும் மக்களின் அரசியலமைப்பு உரிமையை பாதுகாப்பது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசின் முக்கியமான கொள்கையாகும்.

இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க வரும் நாட்களில் முதல்வர் டெல்லிக்குச் செல்ல இருக்கிறார். நவம்பர் 4-ம் தேதி ஸ்ரீநகரில் சட்டப்பேரவையைக் கூட்ட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணைநிலை கவர்னர் ஆற்றவேண்டிய உரையின் வரைவும் அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழு மேலும் விவாதித்து பரிசீலிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து