முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் மக்களின் கோர்ட்; அது பாதுகாக்கப்பட வேண்டும் : தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      இந்தியா
Chandrashut 2024-03-17

Source: provided

பனாஜி : சுப்ரீம் கோர்ட் மக்களின் நீதிமன்றமாக உள்ளதாகவும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமன்றமாக இருப்பதால், நாங்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நிறைவேற்றுகிறோம் என்று சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவாவில் நடந்த சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்தின் (SCAORA) முதல் மாநாட்டில் உரையாற்றிய தலைமை நீதிபதி சந்திரசூட், “கடந்த 75 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் நீதிக்கான அணுகல், நாம் தவறவிடக் கூடாத ஒன்று. சமூகங்கள் வளர்ச்சியடைந்து, செழுமையாகவும், செல்வச் செழிப்பாகவும் பரிணமிக்கும் போது, ​மிக முக்கிய நபர்கள் தொடர்பான வழக்கை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது. நமது நீதிமன்றம் அப்படிப்பட்டது அல்ல. நமது நீதிமன்றம் மக்கள் நீதிமன்றம். மக்கள் நீதிமன்றமாக சுப்ரீம் கோர்ட்டின் பங்கு எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.

மக்கள் நீதிமன்றமாக இருப்பதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று சொல்ல முடியாது. தங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கும்போது சுப்ரீம் கோர்ட் ஓர் அற்புதமான நிறுவனம் என்று நினைப்பவர்கள், அதுவே அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது அதனை ஒரு கேவலமான நிறுவனமாகப் பார்க்கிறார்கள். இது ஒரு ஆபத்தான கருத்து.

சுப்ரீம் கோர்ட்டின் பணியை விளைவுகளின் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்க முடியாது. தனிப்பட்ட வழக்குகளின் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு எதிராக இருக்கலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திர உணர்வுடன் நீதிபதிகள் முடிவெடுக்க உரிமை உண்டு. சட்டத்தின் முரண்பாடு அல்லது பிழைக்காக நீதிமன்றத்தை விமர்சிக்க ஒருவருக்கு உரிமை உண்டு. நீதிபதிகளுக்கு இதில் எந்த சிரமமும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அதன் பங்கை அல்லது அதன் வேலையை விளைவுகளின் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து