முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி முதல் பெண்களுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர் : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      இந்தியா
Chandrababu-Naidu 2024-06-2

Source: provided

திருப்பதி : தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்.  இந்த திட்டத்திற்கு தீபம் என பெயரிட்டிருந்தார். 

இந்த நிலையில் வருகிற தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இது பெண்கள் நலனை ஆதரிப்பது மற்றும் வீட்டுச் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தீபம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை செய்தார்.  பெண்கள் கியாஸ் சிலிண்டர்களுக்காக செலவழித்த பணத்தை மற்ற வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தலாம்  என்று அவர் கூறினார். 

சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து