முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய் தன்ஷிகா நடிக்கும் ஐந்தாம் வேதம்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      சினிமா
Sai-Dhanshika 2024-10-22

Source: provided

90களின் வெளிவந்த மர்மதேசம் சீரியல் புகழ் நாகா இயக்கத்தில், அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள புதிய வெப் சீரிஸ் ஐந்தாம் வேதம்.  இந்த சீரிஸில், சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடிக்க,  அவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்தொடர் ZEE5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் அக்டோபர் 25 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. சாய் தன்ஷிகா தனது அம்மாவின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்குச் செல்லும் பயணத்தில் இந்த கதை தொடங்குகிறது. வழியில், ஒரு இடத்தில் ஒரு சாமியாரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால பெட்டியை அவளிடம் கொடுத்து அதைத் அய்யங்கார் புரத்திலுள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

பல ரகசியங்கள் அடங்கிய அந்தப் பெட்டியை ஒப்படைக்க தன்ஷிகா படம் பாடே இந்த ஐந்தாம் வேதம். இதன் தயாரிப்பாளரான அபிராமி ராமநாதன் பேசுகையில், புராணக் கதைகளை சஸ்பென்ஸுடன் இணைக்கும் இந்த சிறந்த படைப்பான ஐந்தாம் வேதம் மூலம் ZEE5யுடன் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து