முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளாவிய அமைதிக்கு பங்களிக்க இந்தியா தயார் : நிர்மலா சீதாராமன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      இந்தியா
Nirmala-1 2023 02 01

Source: provided

புதுடெல்லி : உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக இருக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது, 

உலக அளவில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. நமது கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்கிறோம். உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக இருக்கிறது. கொரோனா தடுப்பூசி இந்தியா உருவாக்கிய போது, உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு வழங்கியது.

2013-ம் ஆண்டில் 10-வது பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 2047-ம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. அப்போது நமது சொந்த குடிமக்களுக்கு மட்டுமல்ல, உலக சமூகத்திற்கும் செழுமையை உருவாக்க முடியும். 

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போன்ற பல சவால்களுடன் இன்று உலகம் போராடுகிறது. பணவீக்கம், போர்கள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.  உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்வதில் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து