முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு வாரிய மசோதா தொடர்பாக நடந்த பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் மோதல்: தண்ணீர் பாட்டீலை வீசிய திரிணமுல் எம்.பி.

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      இந்தியா
Parlimanet 2024-06-30

Source: provided

புதுடெல்லி : வக்பு வாரிய மசோதா தொடர்பாக  ஆராய அமைக்கப்பட்ட பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் எம்.பி.,க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தண்ணீர் பாட்டீலை எடுத்து மேஜையில் அடித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கைவிரலில் காயம் ஏற்பட்டது. அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அதன் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ.க. எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் அடங்கிய இந்த குழுவில் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில் இந்தக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் எம்.பி.,க்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: 

வக்பு வாரிய மசோதா தொடர்பாக  பார்லிமென்ட் வளாகத்தில் கூட்டுக்குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி 3 முறை பேசினார். மீண்டும் 4-வது முறையாக பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். அதற்கு எம்.பி., அபிஜித் கங்கோபாத்யாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கல்யாண் பானர்ஜி, அங்கிருந்த தண்ணீர் பாட்டீலை எடுத்து மேஜையில் ஓங்கி அடித்தார். பிறகு அதனை எடுத்து கூட்டுக்குழு தலைவரை நோக்கி வீசினார். இதில், கல்யாண் பானர்ஜிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து கல்யாண் பானர்ஜியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ.க, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து