முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 6-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Cauvery 2023 06 07

புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் வரும் 6-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 34 கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில் வரும் 6-ம் தேதி 35-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் கூடுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து