முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Bangalore 2024-10-24

பெங்களூர், பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதியை அறிவித்துள்ளன. 

 கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த செவ்வாய் கிழமை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  விதிமுறைகளை மீறி கூடுதலாக 2 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மகன், காண்டிராக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

பெங்களூருவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனையடைந்தேன். என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.", 

 இந்தநிலையில்,  கட்டிட விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அம்மாநில முதல்வர் சித்தராமையா, பின்னர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இடிந்து விழுந்த இந்தக் கட்டிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வந்துள்ளது. மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழவில்லை. தரமற்ற பணிகளால் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

பணி இடைநீக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மண்டல அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். 

கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கான நிவாரணம் அவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்த பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து