முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருது பாண்டியர்கள் நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி ஆகியோர் புகழாரம்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

சென்னை, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். 

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ம்  தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். 

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரைப் போற்றுகிறேன். விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்களின் போராட்டமும் வீரமும் மக்கள் மனங்களில் என்றும் வாழும். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,  

ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் ஜம்பு தீவு பிரகடனம் அறிவித்து, நாட்டின் விடுதலைக்காக போராடி அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர்_மருதுபாண்டியர்களின்  223-வது நினைவு தினம் மற்றும் குருபூஜையையொட்டி அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும், வணங்கி போற்றுகிறேன் என்று  பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து