முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      தமிழகம்
Sivashankar 2023-05-08

சென்னை, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:- ஆம்னி பஸ்கள் கடந்த 2 ஆண்டுகளாக பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ் மூலம் பயணம் செய்யும் பயணிகள் சுமூகமான பயணம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்.

ஆம்னி பஸ்களில் அதிகம் கட்டண வசூலிப்பதாக பெறப்படும் புகார்களையடுத்து, அரசு சார்பில் இலவச தொலைபேசி எண் (1800 4256151) வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளிக்காக சுமார் 1,000 தனியார் பஸ்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். கட்டண உயர்வு தொடர்பாக புகார் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். பயணத்தை முடித்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து